அடிப்படை ஜோதிடம் – பாடம் 3

பஞ்சாங்கம் என்றால் என்ன? – பஞ்சாங்கம் என்றால் ஐந்து அங்கங்கள்னு அர்த்தம்.

அந்த ஐந்து அங்கங்கள்:

1.வாரம் / நாள்
2 திதி
3. நட்சத்திரம்
4. யோகம்
5. கரணம்

ஞாயிற்றுக்கிழமை முதல் சனிக்கிழமை வரை உள்ள ஏழு நாட்கள்தான் வாரம்.
திதி என்பது வளர்பிறைப் பிரதமை முதல் பெளர்ணமி
வரை உள்ள பதினைந்து நாட்களும், தேய்பிறைப் பிரதமை முதல் அமாவாசை வரை உள்ள பதினைந்துநாட்களும், அதாவது அந்த முப்பது நாட்களும் திதியாகும்.
1. பவுர்ணமி, அமாவசைக்கு அடுத்த நாள் பிரதமை (பிரதமர் என்றால் முதல்வர் என்று பொருள். ) அதுபோல் பிரதமை என்றால் முதல் நாள்.
2. துவிதியை என்றால் இரண்டாம் நாள் தோ என்றால் இரண்டு. துவிச் சகர வண்டி என்று சைக்கிளைக் கூறுவது தங்களுக்கு தெரியும்.
3. திரிதியை என்றால் மூன்றாம் நாள் திரி என்றால் மூன்று அல்லவா?
4. சதுர்த்தி என்றால் நான்காம் நாள் சதுரம் நான்கு பக்கங்கள் கொண்டது.
5. பஞ்சமி என்றால் ஐந்தாம் நாள் பாஞ்ச் என்றால் ஐந்து எனப் பொருள்.
6. சஷ்டி என்றால் ஆறாம் நாள்.
7. சப்தமி என்றால் ஏழாம் நாள். சப்த ஸ்வரங்கள் என ஏழு ஸ்வரங்களைக் கூறுவதில்லையா?
8. அஷ்டமி என்றால் எட்டாம் நாள். அஷ்டவக்கிரம் என்று எட்டு கோணல்களைக் கூறுவதையும் அஷ்ட லட்சுமி என்றெல்லாம் கூறக் கேட்டிருக்கிறோம்.
9. நவமி என்றால் ஒன்பதாம் நாள் நவ என்றால் ஒன்பது என்றும் நவ கிரகங்கள் என்பதும் தங்களுக்குத் தெரியும்.
10. தசமி என்றால் பத்தாம் நாள் தஸ் என்றால் பத்து அல்லவா? தாரம் என்று கடவுளின் அவதாரங்களைக் கூறக் கேட்டிருக்கிறோம்.
11. ஏகாதசி என்றால் பதினொன்றாம் நாள் ஏக் என்றால் ஒன்று தஸ் என்றால் பத்து இரண்டின் கூட்டுத் தொகை பதினொன்று.
12. துவாதசி என்றால் பன்னிரண்டாம் நாள் தோ/துவி என்றால் இரண்டு தஸ் என்றால் பத்து எனவே இதன் கூட்டுத்தொகை பன்னிரண்டு ஆகும்.
13. திரியோதசி என்றால் பதிமூன்றாம் நாள் திரி என்றால் மூன்று + தஸ் என்றால் பத்து ஆகப் பதிமூன்று.
14. சதுர்த்தசி என்றால் பதினான்காம் நாள் சதுர் (சதுரம்) என்றால் நான்கு அத்தோடு தஸ் என்ற பத்து சேர்த்தால் பதினான்கு என ஆகும்.

திதிகளின் அதிபதிகள் 

பிரதமை திதியில்:- அதிபதி :- அக்னி பகவான்
துவிதியை திதியில்:-அதிபதி :- துவஷ்டா தேவதை
திருதியை திதி:- அதிபதி :- பார்வதி
சதுர்த்தி திதி:- அதிபதி :- கஜநாதன் [விநாயகர்]
பஞ்சமி திதி:- அதிபதி :- சர்ப்பம்
சஷ்டி திதி:- அதிபதி :-முருகன்
சப்தமி திதி:- அதிபதி :- சூரியன்
அஷ்டமி திதி:- அதிபதி :- சிவபெருமான்
நவமி திதி:- அதிபதி :-பராசக்தி
தசமி திதி:- அதிபதி :- ஆதிசேஷன்
ஏகாதசி திதி:- அதிபதி :- தர்ம தேவதை
துவாதசி திதி:- அதிபதி :- விஷ்ணு
திரயோதசி திதி:- அதிபதி :- மன்மதன்
சதுர்த்தசி திதி:- அதிபதி :- கலிபுருஷன்
அமாவாசை திதி :- அதிபதி :- பித்ருக்கள், காளி
பௌர்ணமி திதி :- அதிபதி :- லலிதாம்பிகை

திதியில் இருந்து பிறந்ததுதான் தேதி
வானவெளியில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் உள்ள தூரத்தைச் சொல்வதுதான் திதி
விரதங்கள் இருப்பவர்கள், இறைவனுக்கு அபிஷேகம் செய்பவர்கள் இந்தத் திதி பார்த்துத்தான் செய்வார்கள், அதேபோல் புதுக் கணக்குப் போடுபவர்கள் அதிகம் விரும்புவது தசமித் திதி.
திருமணம், இடம் வாங்குவது போனற சுப காரியங்களைச் செய்பவர்கள் அஷ்டமி, நவமி திதியில் செய்வதில்லை.
ஒரு மனிதனின் மரணத்தை திதியை வைத்துதான் குறிப்பிடுவார்கள். ஒருவன் ஐப்பசி மாதம் வளர்பிறை நவமி திதியில் காலமானால், ஒரு ஆண்டு கழித்து அல்லது வருடா வருடம் அவனது சந்ததியினர், அதே ஐப்பசி மாதம் வளர்பிறை நவமி திதியில் தான் அவனுக்கு நினைவுச் சடங்குகளைச் செய்வார்கள். கிராமங்களில் தங்கள் வீட்டில் படையல் போடுவார்கள். இதுபோன்று இன்னும் பல பழக்கங்கள் இந்தத் திதியை வைத்துப் பல சமூகங்களில் பலவிதமாக உள்ளது.

நட்சத்திரம்
நட்சத்திரம் என்பது அஸ்வினி முதல் ரேவதி வரையுள்ள 27 நட்சத்திரங்கள். பூமியை சுற்றி சந்திரன் செல்லும் பாதையில் எந்த நட்சத்திரம் உள்ளதோ அதுதான் அன்றைய நட்சத்திரம். 27 நாட்களில் சந்திரன் வானவெளியில் ஒரு சுற்றை முடித்துவிட்டு அடுத்த சுற்றை அரம்பித்துவிடும்.
தினசரி ஒரு நட்சத்திரம் என்பதால் ஒவ்வொரு நாளும் சந்திரனை வைத்துப் பிறந்த நட்சத்திரம் மாறும், அதேபோல 2.25 நாட்களுக்கு ஒருமுறை பிறந்த ராசியும் மாறும்.
மொத்தம் இருக்கிற 27 நட்சத்திரங்களைப் பற்றி நாம் ஏற்கனவே பார்த்து இருக்கிறோம்.. இல்லையா?

கரணம்: கரணம் – என்பது திதியில் பாதி தூரத்தைக் குறிக்கும்.

கரணங்கள் மொத்தம் 11-ஆகும். அவையாவன:
1. பவ,
2. பாலவ,
3. கெலவ,
4. தைதூலை,
5. கரசை,
6. வணிசை,
7. பத்தரை,
8. சகுனி,
9. சதுஷ்பாதம்,
10. நாகவம்,
11. கிம்ஸ்துக்னம்.
வானவெளியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து சூரியனும், சந்திரனும் செல்கிற மொத்த தூரத்தைக் குறிப்பது யோகம்.

காரகோ பாவ நாஸ்தி
ஏழாம் வீடு – களத்திர ஸ்தானம் – காரகம் பெறுவது – சுக்கிரன். ஐந்தாம் வீடு – குழந்தைகள் ஸ்தானம் – காரகம் பெறுவது – குரு .
கரெக்டா ? இந்த ஏழு கிரகங்களுமே, தனது காரகம் பெறும் இடங்களில் நின்றால் – சொதப்பி விடுகிறார்கள். அவர்கள் வேலை பார்ப்பதே இல்லை.
தனியாக நின்றால் , வெகு நிச்சயமாக சொதப்பல். மற்ற கிரகங்களுடன் இணைந்து இருப்பது – பரவா இல்லை.
அதாவது – எந்த லக்கினமாக இருந்தாலும், ஏழில் – சுக்கிரன் தனித்து இருந்தால் , அவர்களுக்கு திருமண விஷயம் , அவ்வளவு எளிதாக இருப்பது இல்லை. நிறைய பேருக்கு திருமணமே நடப்பது இல்லை. அல்லது வெகு தாமத திருமணம்… முறைப்படி திருமணம் செய்து குடித்தனம் நடத்த முடியாத நிலை இப்படி..தவறி, விதி விலக்காய் நடந்தாலும் – கல்யாணம் பண்ணியும் பிரயோஜனம் இல்லாத நிலைமை. இப்படி….
அதைப் போலவே , ஐந்தாம் வீட்டில் – குரு தனித்து நின்றால் – அவர்களுக்கு – குழந்தை பாக்கியம் இருப்பது இல்லை. ஆகா , பிரமாதம், ஐந்தில் குரு – நல்லா பக்காவா – திரிகோண ஸ்தானத்தில் இருக்கிறார் என அவசரப் பட்டு விடாதீர்கள்..
இதற்க்கு பெயர் தான் காரகோ பாவ நாஸ்தி ….
இதைக் கூட நிறைய ஜோதிடர்கள் தெரிந்து வைத்து இருக்கிறார்கள்.. ஆனால் , நாம் அடுத்து பார்க்க விருக்கும் விஷயம் – நிறைய பேருக்கு தெரிஞ்சு இருக்க வாய்ப்பு இல்லை என்பது என் அனுபவம்…
எந்த ஒரு விஷயமும் தெரிஞ்சுக்கிட ரெண்டு வகை இருக்கு. — ஒன்னு உங்களுக்கு சொல்லிக் கொடுக்கிற குரு – பக்காவா , வெளிப்படையா சொல்லிக் கொடுக்கிறவரா இருக்கணும். … இல்லையா , உங்களுக்கு இயல்பா இருக்கிற ஆர்வம் , உங்க தேடுதல் … உங்களுக்கு நிறைய விஷய ஞானத்தைக் கொடுக்கும்.

கேந்திராதிபத்திய தோஷம் பற்றி :
சுப கிரகங்கள் – கேந்திர அதிபதிகளாக இருந்து , கேந்திரங்களிலேயே நிற்க – அவராலும் ஒன்றும் பிரயோஜனம் இல்லை என்கிறது விதி.. இது எல்லா கிரகங்களுக்கும் இல்லை. முழுக்க , முழுக்க சுப கிரகங்களுக்கு மட்டுமே.
இயல்பிலேயே – அசுப கிரகங்களான – செவ்வாய் , சனி, சூரியன் , தேய்பிறை சந்திரன், தீய கிரகங்களுடன் சேர்ந்தால் அசுப கிரகமான புதன் , ராகு , கேது – ஆகியோர் கேந்திரங்களில் நின்றால் – தோஷமில்லை.
எனவே , கேந்திராதிபத்திய தோஷம் பெறும் கிரகங்கள் – குரு, சுக்கிரன் , வளர்பிறை சந்திரன், தனியாக நிற்கும் புதன்.
இவர்கள் , வேறு கிரகங்களுடன் இணைந்து – கேந்திரத்தில் இருந்தால் , பரவாயில்லை. தனியே நிற்க கூடாது.

Leave a Comment