Astrological Notes
குளிகன் / மாந்தி – புலிப்பாணி மாந்தியை குளிகன் என்றும் அழைக்கபடுகிறது. சனிபகவானின் புத்திரன் என்றும் அழைக்கபடுகிறது. இது துணை கிரகமாக செயல்படுகிறது. பகலில் ஒரு குழந்தை பிறந்தால் குளிகன் என்றும் இரவில் ஒரு குழந்தை பிறந்தால் மாந்தி என்றும் சொல்ல படுகிறது சனியின் மைந்தனும் மாந்தி என்றும் குளிகன் என்றும் கூறப்படும் கிரகமானது லக்கினத்தில் அமைந்தால் அச்சாதகனுக்கு நல்ல மனை வாய்த்தலும் நிறைதனமும், நிலம் முதலியன அமைதலோடு அவனது விதியும் தீர்க்கமானதாக அமையும் என்று கூறுக. … Read more
மீன ராசி மீன ராசி தன்மைகள் :- மீன ராசி ராசிக் கட்டத்தின் 12 வது பெண் ராசியாகும். இது ராசி மண்டத்தில் 330′ டிகிரி முதல் 360′ டிகிரி வரை வியாபித்துள்ளது. இதில், பூரட்டாதி நட்சத்திரம் 4 ஆம் பாதம், உத்திரட்டாதி நட்சத்திரம் 4 பாதங்கள், ரேவதி 4 பாதங்கள் உள்ளன. நட்சத்திர மண்டலத்தில் இது இரட்டை மீன் உருவம் கொண்டது. இதன் நிறம் மஞ்சள். மனித உறுப்புகளில் இது கால் பாதத்தை குறிக்கும். ராசிகளில் இது … Read more
கும்ப ராசி கும்ப ராசியின் தன்மைகள் :- கும்ப ராசி ராசிக்கட்டத்தின் 11 வது ராசியாகும். இதன் அதிபதியும் சனி பகவான் தான். ராசி மண்டலத்தில் 300′ டிகிரி முதல் 330′ டிகிரி வரை வியாபித்துள்ளது. ஒரு குடத்துடன் கூடிய ஆண் உருவம் கொண்டது. இந்த ராசியின் நிறம் கருப்பு. மனித உடல் உறுப்புகளில் கணுக்காலை குறிக்கிறது. இந்த ராசி ஆண் தத்துவம் கொண்ட ஸ்திர ராசியாகும். இதை ஆட்சி செய்யும் கோள் சனீஸ்வரர் ஆவார். தமிழ்மாதங்களில் … Read more
மகர ராசி மகர ராசியின் தன்மைகள் :- மகர ராசி ராசி மண்டலத்தின் 10 வது ராசியாகும். இதன் நிறம் கருப்பு. சனி பகவானின் ஆட்சி வீடாகும். வானில் சுறாமீன் மற்றும் எருது கலந்தது போன்ற தோற்றத்தில் இருக்கும். மனித உறுப்புகளில் முழங்காலைக் குறிக்கும். இது பெண் தன்மை கொண்ட சர ரசியாகும். இதில் உத்திராடம் 2,3,4 பாதங்களும், திருவோணம் 4 பாதங்களும், அவிட்டம் 1,2 பாதங்களும் உள்ளது. இதன் திசை தெற்கு. சௌம்ய குணம் கொண்டது. … Read more
தனுசு ராசி தனுசு ராசியின் தன்மைகள் :- தனுசு ராசி கால புருஷ தத்துவப்படி ராசிக் கட்டத்தின் ஒன்பதாவது ராசியாகும். ராசிகளில் இது உபய தன்மை கொண்ட ஆண் ராசியாகும். இதன் நிறம் மஞ்சள் ஆகும். திசை கிழக்கு. குணங்களில் மிகவும் குரூரத் தன்மை கொண்டது. பஞ்சபூதங்களில் நெருப்புத் தன்மை கொண்டது. பாகை அளவு 240′ முதல் 270′ டிகிரி வரை வியாபித்துள்ளது. வில் அம்பு உருவம் கொண்டது. மனித உடல் உறுப்புகளில் தொடை பகுதியை குறிக்கும். … Read more
விருச்சிக ராசி விருச்சிக ராசியின் குணங்கள் :- விருச்சிக ராசி கால புருஷ தத்துவப்படி ராசிக் கட்டத்தின் எட்டாவது ராசியாகும். இது 210′ முதல் 240′ டிகிரி வரை வியாபித்துள்ளது. ராசி மண்டலத்தில் கருந்தேள் உருவத்தை கொண்டது. இதன் நிறம் சிகப்பு. மனித உடல் உறுப்புகளில் இது இனப்பெருக்க ஜனன உறுப்புகளை குறிக்கிறது. விருச்சிக ராசி ஸ்திர தன்மை கொண்ட பெண் ராசியாகும். இதை ஆட்சி செய்யும் கோள் செவ்வாய் ஆகும். இங்கு ராகு கேதுக்கள் உச்சமடைகிறது. … Read more
துலாம் ராசி துலாம் ராசி பொதுபலன்கள் :- துலாம் ராசி ராசி மண்டலத்தின் ஏழாவது ராசியாகும். இது வான வெளியில் 180′ முதல் 210′ டிகிரி வரை வியாபித்துள்ளது. இதன் வடிவம் தராசு ஆகும். காற்றுத் தத்துவத்தைக் கொண்ட ஆண், சர ராசியாகும். இதன் நிறம் வெண்மை. மனித உடல் உறுப்புகளில் தொப்புள், அடிவயிறு இவற்றை குறிக்கும். சுக்ரன் இதை ஆட்சி செய்கிறார். இங்கு மூலத் திரிகோணமும் பெறுகிறார். இதன் திசை மேற்கு. குணமும் குரூரத் தன்மை கொண்டது. … Read more
கன்னி ராசி கன்னி ராசியின் பொதுவான குணங்கள் :- ராசி மண்டலத்தின் 6 வது ராசியான கன்னி ராசி பஞ்ச பூதங்களில் நிலத் தத்துவம் மிக்க, பெண் தன்மை கொண்ட உபய ராசியாகும். இது வான மண்டலத்தில் 150′ முதல் 180′ டிகிரி வரை வியாபித்துள்ளது. இதன் நிறம் பச்சை. புதன் பகவான் இந்த ராசியை ஆளும் கிரகமாகும். புதன் இங்கு ஆட்சி, உச்சம் மற்றும் மூலத் திரிகோணம் அடைகிறார். மனித உடல் உறுப்புகளில் இது இடுப்பை … Read more
சிம்ம ராசி சிம்ம ராசியின் பொதுவான குணம், தன்மைகள்: ராசி கட்டத்தின் 5 வது ராசியான சிம்ம ராசி நெருப்பு தத்துவம் கொண்ட ஸ்திர தன்மையுடைய ஆண் ராசியாகும், இதன் அதிபதி சூரியன். அவர் ஆட்சி மற்றும் மூலத் திரிகோணம் பெறும் ராசியும் இதுவே. வான மண்டலத்தில் சிங்கத்தின் உருவத்தைக் கொண்ட இந்த ராசி 120′ முதல் 150′ டிகிரி வரை வியாபித்திருக்கிறது. இந்த ராசியின் நிறம் சிவப்பு. மனித உடல் உறுப்புகளில் வயிற்றை குறிக்கக் கூடியது. … Read more