மிதுன லக்னம்
மிதுன லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்:- மிதுன லக்னத்தின் அதிபதி புதன் பகவானவார். இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலோனோர் மாநிறமாக இருப்பார்கள். எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற மனம் கொண்டவர்கள். இவருக்கு கற்பனை சக்தி அதிகம் இருக்கும். கணிதத்தில் வல்லவர்களாக இருப்பார்கள். சிற்றின்பங்களில் அதிக விருப்பம் கொண்டவர்கள். நல்ல கம்பீரமாகவும், மிடுக்கான தோற்றமும் கொண்டவராக இருப்பார்கள். கட்டுக்கதைகளில் நம்பிக்கை இருக்காது. எதையும் அலசி ஆராயும் மனபோக்கு கொண்டவர்கள்.
மிதுன லக்னத்தில் பிறந்தவர்கள் முகத்தில் புன்சிரிப்பு எப்போதும் இருக்கும். பேச்சு வன்மை அதிகம் கொண்டவர். எதையும் பேசி பேசியே சாதித்து விடுவார்கள். செல்வம் ஈட்டுவதில் ஆதிக விருப்பம் கொண்டவர்கள். யாரையும் அவ்வளவு எளிதில் நம்ப மாட்டார்கள். வாழ்கையின் முற்பகுதியை விட பிற்பகுதி அதிக சிறப்பாக இருக்கும். எல்லா விதமான சுகங்களையும் அனுபவிக்க வேண்டும் என்னும் விருப்பம் கொண்டவர்கள். இவர்கள் சுறுசுறுப்பான பேர்விழிகள். எடுக்கும் காரியத்தை முடிக்காமல் விட மாட்டார்கள். ஆனால் இவர்களிடம் உள்ள குறை எதையும் முழு மூச்சாக செய்ய மாட்டார்கள். ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்பது போலதான் இவர்களின் மனநிலை இருக்கும். இதை மட்டும் சரிசெய்து விட்டால் இவர்கள் சிறந்தவர்களாக இருப்பார்கள்.
மிதுன லக்னத்தில் பிறந்தவர்கள் புகழ் பெற வேண்டும் என்னும் விருப்பம் கொண்டவர்கள். தன் குடும்பம் நன்றாக இருப்பதற்காக அயராமல் உழைக்கும் உழைப்பாளிகள். சுயகௌரவதிற்க்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். யாராவது இவர்களை மரியாதை குறைவாக நடத்தினால் பொருத்து கொள்ள மாட்டார்கள். சமுகத்தில் இவர்களுக்கு நல்ல பெயர் இருக்கும்.
இவர்கள் சகல வித கலைகளையும் மற்றும் விஞ்ஞான அறிவையும், பெற்று விளங்குவார்கள். இவர்களுக்கு குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் வரலாம். இவர்களின் வாழக்கை துணை இவர்களின் எல்லா விஷயத்தையும் ஏற்று கொண்டு செயல்படுவர் என்பது உறுதியில்லை. இவர்கள் சுறுசுறுப்பும், புத்திசாலித்தனமும் ஒருசேர கொண்டவர்கள். புதிய விஷயங்களை தெரிந்து கொள்வதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள்.
இவர்கள் உடல் ஆரோக்கியதிற்க்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இவர்கள் நல்ல, உடல்வாகையும், உறுதியான மனநிலையையும் பெற்றவராக இருப்பார்கள்.
மிதுனம் என்றால் புதுமையான. நேர்த்தியான அழகு என அர்த்தம்.
இதில் பிறந்தவர்கள் ஒரு சிலர் சிறிது சோம்பேறி தனம் உள்ளவர்கள், சுகவாசிகள்.
எந்த காரியத்தை செய்தாலும் அதில் ஒரு “மிதுன தன்மை, அழகு இருக்கும் “
இது உபய லக்ன க்ஷேத்ரம் ஆகும். ஆகவே இந்த லக்னத்தில் உதித்தவர்களுக்கு
” களத்ர பாவம் “, ” சகோதர பாவம் போன்ற உறவுகளை சிறப்பாக அமைத்து கொள்ள இவர்களின் நடத்தை மிகவும் முக்கியம். அது ஆணாகட்டும், பெண்ணாகட்டும், இது அவ்வளவு எளிது இல்லை. அதிக முயற்சிக்கு பின்னரே இந்த இரு உறவுமுறைகளில் திருப்தி ஏற்படும்.
அதேபோல் இந்த லக்கினத்தில் பிறந்தவர்கள் தாங்களாகவே சொந்த தொழில் அல்லது ஜீவன மார்க்கம் தேர்ந்தெடுக்க வேண்டாம். நல்ல ஆலோசகரை அணுகி பிறகு முக்கிய முடிவுகள் எடுக்க நல்ல பலன் கிடைக்கும்.
ஒரு சிலருக்கு தொழில் / வேலை அதுவாகவே அமையும். அதில் பூரண திருப்தி கிடைக்க அனுபவசாலிகளின் ஆலோசனைகளை நிச்சயம் பின்பற்ற வேண்டும்.
மிதுனம் ஓஜ இராசி (ஆண் ராசி), காற்று ராசி, இரட்டை ராசி, இரவில் பலம் உள்ள இராசி.
மிருகசீரிடம் நக்ஷத்ரம் 3,4 பாதங்களும், திருவாதிரை 1,2,3,4, பாதங்களும், புனர்பூசம் 1,2,3, பாதங்களும் மிதுனம் கொண்டுள்ளது,
இதன் உருவம் – வீணை தரித்து கொண்டு ஒரு ஆணும், பெண்ணும் உள்ள ரூபம்.
மிதுன லக்ன காரர்கள் அறிவாளிகள், கலைநயம் உள்ளவர்கள்.
ஒரு சிலர் பிறந்த வீட்டில் உள்ளவர்களிடம் அதிகம் இணக்கமாக இருக்க மாட்டார்கள்.
எதையும் சுதந்திரமாகவும், சுகமாகவும் செய்ய வேண்டும் என்பதே “மிதுனன் விருப்பம்”, ஆனால் உறவுகள் சில இதற்கு குறுக்கே நிற்கும்,
மிதுன லக்கின ஜாதகர்கள் தீர்க்க சரீரம், (நல்ல உடல்வாகு) உள்ளவர்கள். பெரிய நெற்றி உடையவர்கள்.
மிதுன லக்கினத்தில் பிறந்த நபர்கள் சற்று சாந்த குணம் கொண்டவர்கள். ஆனால் இவர்களுக்கு கோபமும் உண்டு.
இவர்களுக்கு பல தொழில்கள் கற்று கொள்ள கூடிய திறமை இருக்கும். கடும் முயற்சிக்கு பின்னர் அதில் நிச்சயம் வெற்றி அடைவர்.
சுக்கிரன், புதன் ஜனன ஜாதகத்தில் சூரிய மௌடிகம் (சூரியனுடன் இணையாமல் அஸ்தங்கம் பெறாமல்). நீச்சம், சத்ருக்ஷேத்திரம் (பகை வீடு) ஆகியவை இல்லாமல் இருந்தால் உன்னத பலன்கள் ஏற்படும்.
நீண்ட கால வேலைகள் இவர்களுக்கு பிடிக்காது, எளிமையான சீக்கிரம் முடியும் வேலைகள் இவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
மிதுனன், மிதுனத்தி இரண்டு விஷயங்கள் கண்டிப்பாக ஜீவிதத்தில் (வாழ்க்கையில் எப்போதும்) கடை பிடிக்க வேண்டும்.
கோபம் கூடாது, குலதெய்வம் வழிபாடு கட்டாயம் தவறாமல் செய்ய வேண்டும்.
பலரும் உங்களை ஏமாற்ற காத்து கொண்டு இருப்பார்கள். எனவே கவனம் தேவை.