ரிஷப லக்னம்

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதிசியங்கள்:- ரிஷப லக்னத்தின் அதிபதி சுக்ரன் பகவானாவார். இவர்களில் பெரும்பாலானோர் நல்ல சிவந்த மேனியும், பெரிய முக்கு மற்றும் வாயும், அகலமான தோள்களும், கொண்டவராக இருப்பார்கள். இவர்கள் கோபக்காரராக இருப்பீர்கள். சுகபோகமான வாழ்க்கை வாழ்வதில் விருப்பமுடையவர்கள்.

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலோனோர் செல்வச் செழிப்புடன் வாழும் குடும்ப அமைப்பை பெற்றிருப்பார்கள். நல்ல அழகான மனைவியை அடைந்து சந்தோஷ வாழ்க்கை வாழ்வார்கள். எப்போதும் மன நிம்மதியுடன் வாழ்க்கை வாழ விரும்புவார்கள். கணக்கில் புலியாக இருப்பார்கள்.

இவர்கள் எல்லோரிடமும் நட்புடன் இருக்கவே விரும்புவார்கள். எப்பேற்பட்ட  மோசமான சூழ்நிலையாக இருந்தாலும் அதை பொறுமையாக கையாளகூடியவராக இருப்பார்கள். ஒளிவு மறைவின்றி, எதிலும் மனம்விட்டு வெளிப்படையாக இருக்கக்கூடியவர்கள். எப்போதும் நேர்மையாக இருக்க வேண்டும் என விரும்புபவர்கள். தன்னை சார்ந்தவர்களும் அவ்வாறே இருக்க விரும்புவார்கள்.

இவர்களின் மனதை புரிந்து கொண்டு செயல்படுவது அவ்வளவு எளிதல்ல. இவர்களுக்கு கலைகளில் அதிக ஆர்வம் இருக்கும். கலை சார்ந்த தொழில்கள் இவர்களுக்கு அதிக ஆதாயம் தரும். தன்னை அழகுபடுத்திகொள்வதில் அதிக ஆர்வம் உடையவர்கள். இவர்கள் பேச்சில் சாமர்த்தியசாலிகள். பேசி பேசியே மற்றவர்களை மயக்கி விடுவார்கள்.

இவர்கள் சூழல் சிறு வயதில் இருந்தே குடும்ப பொறுப்பை சுமப்பார்கள். தாரளமாக செலவு செய்ய விருப்பமுடையவர்கள். இதனால் பணசிக்கலை இவர்களாகவே உண்டாக்கி கொள்வார்கள். இவர்களுக்கு சிற்றின்ப ஆசை அதிகமாக இருக்கும். எதிர்பார்ப்பு அதிகம் கொண்டவர்கள். கம்பீரமான உடல்வாகை கொண்டவர்கள்.

இவர்கள் குடும்பத்தின் மேல் அதிக ஆசை கொண்டவர்கள். மனைவியாக இருந்தால் கணவனிடமோ, கணவனாக இருந்தால் மனைவியிடமோ அதிக பற்றுதலுடன் இருப்பார்கள். இவர்கள் குழந்தைகளிடம் மிகுந்த அன்பும், ஈடுபாடும் கொண்டவர். இவர்கள் உத்தியோகத்தில் இருந்தால் பெரிய பதவிகளை வகிப்பார்கள். இவர்கள் அவ்வளவு எளிதில் பதட்டபடமாட்டார்கள். இளகிய மனம் கொண்டவர்கள். நல்ல மனிதர்களுடன் இருக்கவே விரும்புவர். சமுகத்தில் இவர்கள் நல்ல பெயரும் புகழும் பெறுவீர்கள்.

சமுக மற்றும் குடும்ப கடமைப் பொறுப்புக்களை தவறாமல் செய்வார்கள். இவர்கள் எல்லா விஷயத்திலும் எப்போதுமே, விசுவாசத்துடன் இருக்கவிரும்புவார்கள். தன்னை போலவே மற்றவர்களும் முன்னேற வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர்கள். நல்ல வாழ்கை வாழ வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர்கள்

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு கேந்திர ஸ்தானம் என அழைக்கபடும் நான்காம் வீடு – சுக, வண்டி, வீடு ஸ்தானம், தாய் ஸ்தானத்திற்கு அதிபதி சூரியன் ஆவார். இவர் ராஜகிரகம், அதனால் சுக போக, வண்டி, வீடு ஆகிய வசதி வாய்ப்புகள் அமைந்தால் சிறப்பாகவே அமையும், அகங்காரத்தன்மை ஏற்படுத்தக்கூடிய கிரகம் சூரியன் என்பதால் அதிகாரம் தலைக்கு ஏறலாம், இருந்தாலும் ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 80% நன்மையான பலன்களும் 20% தீமையான பலன்களையும் தரவல்லார்.

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு கேந்திர ஸ்தானம் என அழைக்கபடும் ஏழாம் வீடு – களத்திர ஸ்தானம், வணிக ஸ்தானத்திற்கும், மறைவு ஸ்தானம் என அழைக்கபடும் பன்னிரண்டாம் வீடு – நட்ட ஸ்தானம், மோட்ச ஸ்தானத்திற்கும் அதிபதி செவ்வாய் ஆவார், ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு இல்லற சுகத்திற்கு முக்கிய காரகத்துவம் பெற்றவர் செவ்வாய் எனவே வலுப்பெறாவிட்டாலும் கெட்டுவிடக்கூடாது இவர் 60% சுப தன்மையுடைய சுபர் அதாவது ஜாதகரின் வாழ்வில் 60% நன்மையான பலன்களும் 40% தீமையான பலன்களையும் தரவல்லார், அதுவே திருமண மணமகன், மணப்பெண் தேடும் காலங்களில் செவ்வாய் திசை புத்தி வந்தால் திருமணம் கைகூடும்.

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மறைவு ஸ்தானம் என அழைக்கபடும் ஆயுள் ஸ்தானம், மர்ம ஸ்தானம், துரதிர்ஷ்ட ஸ்தானமான 8 ஆம் வீட்டிற்கும், பதினோராம் வீடு – லாப ஸ்தானம், சமூக ஸ்தானத்திற்கும் அதிபதி குரு பகவான் ஆவார், ஸ்திர லக்னம் என வர்ணிக்கப்பட கூடிய ரிஷப லக்னத்திற்கு 3,8 ஆம் வீடுகள் மாரக ஸ்தானம் ஆகும். அதனால் குரு மாராகாதிபதி தன்மையையும் அடைகிறார். அதனால் ரிஷப லக்ன ஜாதகருக்கு 85% பாவரே, அதாவது 85% தீமையான பலன்களையும் தரவல்லார், ரிஷப லக்ன ஜாதகருக்கு இவர் பாவர்.

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு திரிகோண, கேந்திர ஸ்தானங்கள் என அழைக்கபடும் ஒன்பதாம் வீடு – தர்ம ஸ்தானம், பாக்ய ஸ்தானம், தந்தை ஸ்தானத்திற்கும், பத்தாவது வீடு – கர்ம, காரிய, ராஜ்ய ஸ்தானத்திற்கும் அதிபதி சனி பகவான் ஆவார் மேலும் ரிஷப லக்னத்திற்கு 9 ஆம் வீடு பாதகஸ்தானம் ஆகும். எனவே சனி பாதகாதிபதி தன்மையையும் அடைகிறார். இருந்தாலும் பெரிய பாதகங்களை செய்ய மாட்டார்

ஏனென்றால் ரிஷப லக்னாதிபதி சுக்கிரனுக்கு இவர் தீவிர நண்பர், அதனால் ரிஷப லக்ன ஜாதகருக்கு இவரே தொழில் வெற்றி, புகழ், அதிர்ஷ்டங்கள், முன்னேற்றத்தையும் தரவல்லார் எனவே சுப தன்மையுடைய சுபரே.

ரிஷப லக்கினத்திற்கு புதனும் சனியும் இரண்டாம் இடத்தில் இருப்பது தன யோகம் ஆகும்.

ரிஷப லக்னத்தில் லக்னாதிபதி இருக்க புதனும் சனியும் சேர்க்கை பெற்று லக்னத்தில் இருந்தாலும் பார்த்தாலும் செல்வம் சேரும்.

1, 4, 6, 7,9 ஆகிய வீடுகளில் சுக்கிரனும், சனியும் சேர்க்கை பெற்றோ அல்லது ஒருவரை ஒருவர் பார்த்தால் பொருள் சேரும்.

சுக்கிரனும், சனியும், சூரியனும் புதனும், சனியும் புதனும் சேர்க்கையோ அல்லது பார்வையோ இருந்தால் நற்பலன்கள் உண்டாகும்

சுக்கிரன் + செவ்வாய் சேர்க்கை யோகத்தை தர வல்லது.

ரிஷப லக்னம் – பொது பலன்கள்

இவர்களின் வீடு வீதியின் நடுப்பகுதியில் இருக்கும்.

யாதவர் குடும்பம் அருகில் இருக்கும்.

பணம் புழங்க கூடிய இடங்கள் ரிஷபத்தை குறிக்கும்.

அழகு நிலையம், வளையல் கடை, பெண்கள் பள்ளி, கல்லூரிகள் போன்றவைகள் அருகில் இருக்கும்.

பெண் நண்பர்கள் அதிகம்.

இரட்டை வருமானம் கொண்டவர்கள்.

வாக்கு பலிதம் உள்ளவர்கள், ஜோதிடம் சம்பந்தப்பட்ட வருமானங்கள் இருக்கும்.

கூட்டுத் தொழில் இவர்களுக்கு சரி வருவதில்லை.

திருமணத்திற்கு பிறகு தொலை தூர இடங்களுக்கு செல்லும் வாய்ப்பும், மனைவியால் சுப விரையமும் ஏற்படும்.

இவர்கள் பொறுப்பானவர்கள்.

இவர்கள் செய்யும் எந்த செயலிலும் இவர் பெயர் முன்னால் இருக்காது, மறைமுகமாகத்தான் இருக்கும்.

தாயார் பற்று அதிகம். வீடு நிலம் வாகனம் பற்றிய எண்ணங்கள் இவர்களுக்கு மிகவும் அதிகம். உடன் பிறந்தோர் மீது அக்கறை காட்டுபவர்கள்.

எந்த ஒரு செயலையும் செய்து முடித்த பிறகு தனிமையில் அமர்ந்து நினைத்து அசை போட்டுக் கொண்டிருப்பார்கள்.

இவர்கள் பெருமாளின் பக்தர்களாக இருப்பார்கள். மனைவி மீது அதிக பிரியம் உடையவர்கள். பெண்மையின் மென்மை தன்மை இருக்கும். சிரித்துப் பேசியே காரியம் சாதிப்பவர்கள்.

புதிய வீடுகளை வாங்குவதைக் காட்டிலும் பழைய வீடுகளை வாங்குவதே சிறப்பு.

விருந்து உண்பதிலும் உபசரிப்பதில் அதிக விருப்பம் உடையவர்கள்.

வீட்டை அழகு படுத்துவதில் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்பவர்கள்.

ரிஷப லக்னக்காரர்களுக்கு தெற்கு திசையில் வீடு இருந்தால் மிகவும் உத்தமம்.

கலாரசனை படைத்தவர்கள். எழுத்துத் துறையிலும், கல்வித்துறையிலும், ரியல் எஸ்டேட், நகை – ஆபரண துறையிலும் இவர்களுக்கு லாபம் கொழிக்கும்.

தனது சேமித்த பணத்தை எதிலாவது முதலீடு செய்துவிட்டு தினம் தினம் பணத்திற்காக அலையக் கூடிய நிலையும் ஒரு சிலருக்கு ஏற்படுத்தும். கவனம் தேவை.

ஸ்திர லக்னமாக இருப்பதினால் இவர்கள் ஓரிடத்தில் நிலையாக இருப்பதையே விரும்புவார்கள். அடிக்கடி மாற்றத்தை விரும்பமாட்டார்கள். இவர்களின் செயல்களும் நின்று நிதானித்து செயல்படும் வகையில் இருக்கும்.

ரிஷபம் குறிக்கக்கூடிய இடங்கள்:

மாட்டுக் கொட்டகைகள்,பணம் புழங்க கூடிய இடங்கள், கால்நடை குடிசைகள், புல்வெளி, சமவெளி, நிலவறைகள், தாழ்வான இடங்கள், அதிகமான மரங்கள் உள்ள இடம்.

ரிஷபம் குறிக்கக் கூடிய நாடுகள்:

பாரசீகம் கம்போடியா, சைப்ரஸ், ஆசியா, போலந்து, ரஷ்யா,அயர்லாந்து

பணம், தொழில், தன் சுகம், ஆடம்பரம் என்று இருப்பதை காட்டிலும் சற்று குடும்பத்தினருடன் நேரத்தை ஒதுக்க, ரிஷப லக்னத்தவற்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு அதிகம் கிடைக்கும்.

Leave a Comment