ரோகிணி நட்சத்திரம்
ரோகிணி நட்சத்திரம் – ஜோதிட பலன் & இயல்பு
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த நட்சத்திரம் ரோகிணி. இந்த நட்சத்திரத்தின் அதிபதி சந்திரன். ராசிநாதன் சுக்கிரன். ரோகிணி நட்சத்திரம் உயிர்த்தன்மை, இயற்கை வளர்ச்சியின், உயிர்களின் பெருக்கம் ஆகிய குணாம்சங்களை வெளிப்படுத்துகிறது. சந்திரனின் சாரம் பெற்றுள்ள இந்த நட்சத்திரம் பால்வெளியில் அதிகம் ஒளிரும் தன்மை கொண்டது.
பொதுவான குணங்கள்
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதையும் கற்றுக் கொள்வதில் வல்லவர்கள். பெரிய பதவியில் இருப்பவர்களின் அன்பைப் பெற்றிருப்பார்கள். எதையும் சுயமாக சிந்தித்து முடிவெடுப்பவர்கள். சுதந்திரமானவர்கள். பெரியோர்களின் அறிவுரை மதித்து நடப்பார்கள். மொழிப் பாடங்களில் பண்டிதராக விளங்குவார்கள். பசித்தவர்களுக்கு உணவளிப்பதில் சிறந்தவர்கள்.
வருங்காலத்தை முன்கூட்டியே உணரும் ஆற்றலைப் பெற்றவர்கள். பெண்கள் விரும்புவராக இருப்பார்கள். தங்க ஆபரணங்களையும், உயர்ந்த ரத்தினங்களையும் அணிபவராக விளங்குவார்கள். அதிர்ந்து பேசாத மென்மையான குணம் கொண்டவர்கள். சூழ்நிலைகளை தங்களுக்கு சாதகமாக திருப்புவதில் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள். அதிகம் பேசாமல் செயல் மூலமாக பல விஷயங்களை தெரியப்படுத்துவார்கள்.
சிறந்த படைப்பாற்றல் திறனும் கற்பனை வளமும் கொண்டவர்கள். மனசஞ்சலங்களால் சமயங்களில் அமைதியிழந்தும் காணப்படுவர். இவர்களின் அழகும், ஆடம்பர வாழ்க்கையும் மற்றவர்களை பொறாமைப்பட வைக்கும். கடின உழைப்பை மேற்கொள்பவர்கள். தங்களது படைப்பாற்றலாலும், புத்திசாலித்தனாலும் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவார்கள்.
சகிப்புத்தன்மை நிறைந்தவர்கள். பிறர் தனக்கு எவ்வளவு தீங்குகள் விளைவித்தாலும் அதை பொருட்படுத்தாமல் மீண்டும் அவர்களுக்கு உதவும் பரோபகார மனம் கொண்டவர்கள். நட்சத்திரத்தின் அதிபதியாக சந்திர பகவான் இருப்பதால் எளிதில் மற்றவர் தவறுகளை மன்னித்து மறந்துவிடுவார்கள். மனதில் வஞ்சம் இருக்காது. ஜனங்களை கவரும் நட்சத்திரம் என்பதால் திரைத்துறையில் பெரிய கலைஞர்களாக இருப்பார்கள்.
எதையும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை பெற்றவர்கள். பள்ளிகளில் கலை தொடர்பான போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை அள்ளுவார்கள். ரோகிணி நட்சத்திர ஆண்கள் தனது மனைவியிடம் விட்டுக் கொடுத்து அனுசரித்து வாழ்வார்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திறமையான சிற்பிகளாகவும், நடனம் மற்றும் இசைக் கலைஞர்கள், படைப்பாற்றல் இயக்குனர்களாக திகழ்வார்கள். விவசாயம், சுற்றுச்சூழல் தொழில்களில் ஈடுபட்டு சமுதாயத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். விளம்ரபம், கதை எழுதுவது, மார்க்கெட்டிங் மற்றும் நகைகள் வடிவமைத்தல் போன்ற தொழில்களில் பெரிய உச்சங்களைத் தொடுவார்கள்.
ரோகிணி நட்சத்திரம் ஒன்றாம் பாதம்
முதல் பாதத்தில் பிறந்தவர்கள் மேஷ ராசிக்குரிய செவ்வாய் பகவானின் ஆதிக்கத்துக்குட்பட்டவர்களாக இருப்பார்கள். சுகபோகங்களை அனுபவிக்க ஆர்வம் கொள்வார்கள். தான தர்மம் செய்பவர்களாக இருப்பார்கள். எப்போதும் மனப்போராட்டத்துடன் செயலாற்றுவார்கள். பூர்வீக சொத்துக்களை அனுபவிக்கும் யோகம் பெற்றவர்கள். காவல்துறை, ராணுவத்தில் விருப்பம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
ரோகிணி இரண்டாம் பாதம்
இரண்டாம் பாதம் சுக்கிர பகவான் ஆதிக்கத்திற்குள் வருகிறது. இதில் பிறந்தவர்களுக்கு செல்வத்திற்கு குறைவிருக்காது. சொகுசான வாழ்க்கையை அனுபவிப்பார்கள். எந்த விஷயத்தையும் கலையார்வத்தோடு ரசித்து செய்வார்கள். அழகியத் தோற்றமும் உடலமைப்பும் பிறரைக் கவரும் விதமாக இருக்கும். சாந்தமான குணத்தைப் பெற்றிருந்தாலும் நெருக்கடி வரும் வேளைகளில் வீராவேசத்தோடு செயல்படுவார்கள். தர்ம சிந்தனை, இரக்கம், பொதுநலத்தில் ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள். விரும்பியது கிடைக்காவிட்டால் பெரும் துன்பத்திற்குள்ளாவார்கள்.
ரோகிணி மூன்றாம் பாதம்
புதன் பகவானின் ஆதிக்கம் பெற்ற பாதம் இது. இதில் பிறந்தவர்கள் இயல்பாகவே சிறந்த சிந்தனைத் திறனோடு புத்திசாலிகளாகவும் இருப்பார்கள். சிறந்த கல்விமானாக இருப்பார்கள். கணிதம், அறிவியல் துறைகளில் மிகப்பெரிய சாதனைகளை படைப்பார்கள். ஓவியம், சிற்பம், நடனம், இசை ஆகிய கலைகளில் அதிக ஈடுபாடு இருக்கும். சிலர் இந்தக் கலைகளில் நிபுணத்துவம் பெற்று பெயரையும், புகழையும் சம்பாதிப்பார்கள். நடுத்தர வயதிற்குள்ளாகவே பெரும் செல்வந்தராகும் யோகம் பெற்றவர்கள்.
ரோகிணி நான்காம் பாதம்
ரோகிணி நட்சத்திரத்தின் நான்காம் பாதம் சந்திர பகவானின் ஆளுகைக்குள் வருகிறது. திடமான மனோபலத்தை பெற்றிருப்பார்கள். என்ன விரும்புகிறார்களே அதை அடைவதற்கு முயல்வார்கள். குடும்ப பற்றுள்ளவர்கள். எதையும் பொறுமையாக சாதிக்கும் குணம் கொண்டவர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவர்கள். அரிசி, மருந்து மீன் தொடர்பான தொழில்களில் மிகப்பெரிய செல்வத்தை ஈட்டுவார்கள். ஒரு சிலர் அரசியல் துறையில் ஈடுபட்டு பெரிய பதவிகளை அடைவார்கள். வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு பெரும் பொருளையும், புகழையும் ஈட்டுவார்கள்.
ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கான கோயில்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது அருள்மிகு பாண்டவதூதப் பெருமாள் கோயில். தாயார் சத்யபாமா, ருக்மணி. ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் தோஷங்கள் அகல இத்தல இறைவனை வழிபடுகின்றனர். இத்தலத்தில் வீற்றிருக்கும் கிருஷ்ணரை தரிசித்து வந்தால் எந்த துன்பமாக இருந்தாலும் விலகிவிடும் என்பது ஐதீகம்.
ஜோதிட பலன் & இயல்பு
ரோகிணி நட்சத்திர குணங்கள்

*ரோஹினி நட்சத்திரம்*
சந்திரனின் நட்சத்திரமான ரோகிணி அதிகம் ஒளிரும் தன்மை கொண்ட நட்சத்திரமாகும். சுக்கிரனை ஆட்சி வீடாகக் கொண்ட ரிஷபராசியில் அமைந்திருக்கும் நட்சத்திரம் ரோகிணி. ரோகிணி நட்சத்திரத்தில்தான் பகவான் கிருஷ்ணர் அவதரித்தார். அவருடைய அவதாரம் கம்சனின் அழிவுக்குக் காரணமாக இருந்ததால், ‘ரோகிணியில் பிறந்தால் தாய்மாமனுக்கு ஆகாது’ என்று சொல்லுவதுண்டு.
ஆனால், அது முற்றிலும் சரியில்லை. புதனும் லக்கினத்துக்கு ஐந்தாம் இடத்துக்கு உரிய கிரகமும் இருக்கும் நிலையைப் பொறுத்தே தாய்மாமனுக்கு ஆகுமா, ஆகாதா என்பதை முடிவு செய்யவேண்டும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள், அமைதியான வாழ்க்கையையே எப்போதும் விரும்புவீர்கள். எல்லோரிடமும் மென்மையாகப் பேசிப் பழகுவீர்கள். இனிப்பு வகைகளை விரும்பி உண்பீர்கள். பெரியவர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுப்பீர்கள். எந்தச் சந்தர்ப்பத்திலும் விதிமுறைகளை மீறமாட்டீர்கள்.
ஒருவர் எத்தனை பெரிய பதவியில் இருந்தாலும், உங்களிடம் மிகவும் பிரியத்துடன் நடந்துகொள்வார்கள். சகல வித்தைகளையும் ஆர்வத்துடன் கற்றுத் தேர்ச்சி பெற்று விளங்குவீர்கள். பல மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருப்பீர்கள். என்றாலும் தாய்மொழியை மிகவும் நேசிப்பீர்கள். சிலர் எதிர்காலத்தை கணித்துச் சொல்லும் ஆற்றல் பெற்றிருப்பீர்கள்.
விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்களை அணிவதை விரும்புவீர்கள். எந்த ஒரு செயலையும் திட்டமிட்டுச் செய்வீர்கள். உங்களுடைய பேச்சாலும் செயலாலும் எதிரிகளைக்கூட கவர்ந்துவிடுவீர்கள். நேர்மைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பீர்கள். மற்றவர்கள் தவறு செய்தால் தட்டிக்கேட்பீர்கள். உள்ளதை உள்ளபடி பேசுவீர்கள்.
ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். மற்றவர்களுக்கு விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையைப் பெற்றிருப்பீர்கள். கலைத்துறை சார்ந்த போட்டிகளில் பரிசும் பதக்கமும் பெறுவீர்கள். கற்பனை வளம் அதிகம் பெற்றிருப்பீர்கள். மனைவிக்கு விட்டுக்கொடுப்பதில் மகிழ்ச்சி அடைவீர்கள்.
பிள்ளைகளிடம் மிகவும் அன்புடன் நடந்துகொள்வீர்கள். அதன் காரணமாகவே அவர்களை அதிக சுதந்திரம் கொடுத்து வளர்ப்பீர்கள். உங்களில் சிலர் திரைப்படத்துறையில் பெயரும் புகழும் பெற்றிருக்கக்கூடும். எப்போதும் சுகபோகங்களுடன் வாழவேண்டுமென்று விரும்புவீர்கள். பொதுநல சேவையில் ஈடுபடுவதில் விருப்பமுள்ளவர்களாக இருப்பீர்கள்.
நீங்கள் முதலாளியாக இருந்தாலும், உங்களுக்குக் கீழ் பணிபுரியும் பணியாளர்களை மதிப்புடனும் அன்புடனும் நடத்துவீர்கள். எப்போதும் சிரித்த முகத்துடன் காட்சி தருவீர்கள். உங்கள் தோற்றத்தை வைத்து உங்கள் வயதை கணிக்கமுடியாது.
*ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கான கோயில்*