மீன ராசி
மீன ராசி தன்மைகள் :- மீன ராசி ராசிக் கட்டத்தின் 12 வது பெண் ராசியாகும். இது ராசி மண்டத்தில் 330′ டிகிரி முதல் 360′ டிகிரி வரை வியாபித்துள்ளது. இதில், பூரட்டாதி நட்சத்திரம் 4 ஆம் பாதம், உத்திரட்டாதி நட்சத்திரம் 4 பாதங்கள், ரேவதி 4 பாதங்கள் உள்ளன. நட்சத்திர மண்டலத்தில் இது இரட்டை மீன் உருவம் கொண்டது. இதன் நிறம் மஞ்சள். மனித உறுப்புகளில் இது கால் பாதத்தை குறிக்கும். ராசிகளில் இது உபய ராசியாகும். இதன் திசை வடக்கு. சௌம்ய குணத்தை குறிக்கும். பஞ்சபூதங்களில் நீர் தத்துவத்தை குறிக்கும். புருஷார்த்த தத்துவங்களில் மோட்சம் எனும் தத்துவத்தை கொண்டது.
மீன ராசி காரகத்துவங்கள்:- குளம், குட்டை, ஆள்கிணறு, நீர் நிறைந்த தொட்டி, புண்ணிய நதிக்கரை, புண்ணிய ஸ்தலங்கள், நீர் நிலைகளில் வேலை செய்பவர், சேறு நிறைந்த இடம், கப்பல் கட்டுதல், சமுத்திரம், பூகம்பம், சுனாமி, இடி விழுதல், வாழ்வின் முடிவைக் காட்டும் ராசி, இரட்டை குணம் கொண்டது.
குணம் :- மீன ராசிக் காரர்களின் குணத்தின் படி இந்த செயல் கடினம் என்ற சொல்லே கிடையாது, அவரே முயற்சி செய்தல், இவரது குணம் எப்பொழுதும் வித்தியாசமாகவும், நல்ல புத்தி கூர்மையானவாதியானவர், தனக்கு என்று அனைத்தையும் எடுத்து வைப்பவர்.
தோற்றம்:- மீன ராசிக்காரர்களுக்கு தட்டையான கைகள் இருக்கும். கட்டைவிரலுக்குக் கீழே உள்ள வீக்கம் சதைப்பற்றுள்ளதாகவும் நன்கு வளர்ந்ததாகவும் இருக்கும். சிறிய விரலுக்குக் கீழே சந்திரனின் வீக்கமும் நன்கு வளர்ந்திருக்கிறது, இது உணர்திறன் மற்றும் கற்பனையைக் குறிக்கிறது. உள்ளங்கை சதைப்பற்றானது. விரல்கள் பொதுவாக தடிமனாகவும் கை மென்மையாகவும் இருக்கும். அவர்களின் கழுத்து, காது, கை மற்றும் காலில் ஒரு மச்சம் அல்லது நெருப்பு அல்லது ஆயுதத்தால் ஏற்படும் அடையாளம் உள்ளது.
வீடு-குடும்பம் :- மீன ராசிக் காரர்களின் குடும்ப வாழ்க்கை மிகவும் அமைதியாக இருக்கும். அதிகமாக நிம்மதி நிறைந்து இருக்கும். வீ£ட்டில் இருப்பவர்கள் மனவெளிச்சியாக இருந்தாலும் மீன ராசிக் காரர்கள் யதார்த்தமாக இருப்பார்கள். மீன ராசிக் காரர் தந்தை மீது மதிப்பும் மரியாதையும் கொண்டவர். தாய் மீது மதிப்பு குறைவு.
கல்வி:- மீன ராசிக்காரர்கள் கலை, சங்கீதம், இலக்கியத்தில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பர். இதில் இவர்கள் அக்கறை காட்னால் நல்லது. சாஸ்திரம், புகைப்படத் துறை, விஞ்ஞானம், அழகு போன்ற துறைகளில் அதிக ஆர்வம் இருக்கும்.
வேலை:- மீன ராசிக் காரர்களின் தொழில் ஸ்தானம் அவர் பிறந்த தேதி கிரகத்தை கொண்டு அமையும். இருந்தாலும் மீன ராசிக் காரர்கள் கலை சங்கீதம் முதலியவற்றில் உயர்ந்திருப்பார் அதுமட்டுமல்லாமல் மொழி, கடல் மற்றும் கற்பனை ரசனை உடையவர்களாகவும் இருப்பார். இவர்கள் சாகித்தியத்தில் கேள்வி கேட்பதில் வல்லவர். இவரின் ஆற்றலில் பலர் பங்கேற்க வந்தடைவார். மீன ராசிக் காரர்கள் தனியார் கம்பெனிகளில், அழகு படுத்துதலில், கப்பற் படை வீரர்களாகவும் மிகுந்து விளங்குவர். இவருடைய கடை முக்கிய இடமான கிழக்கு, மேற்கு இடங்களில் கடைகள் அமைய வேண்டும் மற்றும் 2, 4 மற்றும் 6 அறைகள் இருக்க வேண்டும். கடற்கரை ஓரம் மற்றும் நதி கரை ஓரமாக அமைந்திருக்க வேண்டும். பிறந்த இடத்திலிருந்து வெகு தொலைவு சென்று வாழ்வில் மின்னுவர். மீன ராசிக் காரர்களிடம் எவ்வளவு சொத்து இருந்தாலும் அமைதி இருக்காது.
பிசினஸ்:- மீன ராசிக்காரர்களுக்கு வேலை செய்வதில் ஆர்வம் இருக்காது. இவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபடுவது சிறந்தது. புதிய ஆடை வடிவமைப்பு, சங்கீதம் தொடர்பான பணிகளில் ஈடுபடலாம்.
காதல் உறவு:- மீன ராசி காரர்களிடம் அன்பும், பொறுமையும் நிலைத்திருக்கும். எப்பொழுதும் அவர்களின் வாழ்க்கையில் வெற்றி நிலைபெற்றிருப்பதில் மீனராசிக் காரர்களின் ஸ்பாவம் எப்பொழுதும் காம இச்சை கொண்டவராக இருக்கும். இவர்கள் இயற்கையை விரும்புவர். இவர்களை யார் நேசிக்கின்றனரோ அவர்களை இவர் நேசிப்பார். எப்பொழுதும் நற்குணங்களை கொண்டவர். இவர்களின் ரகசிய வாழ்வை பற்றி யோசிப்பது கிடையாது. இந்த ராசிக் காரர்களே யோசித்து எல்லா காரியங்களையும் நடத்தி முடிப்பார். இந்த ராசிக் காரர் உணர்ச்சியை தரக் கூடிய செயல்களை செய்பவர். தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்ள எதையும் செய்ய நினைப்பவர். அன்பிற்காக இவர் அனைத்தையும் அழிக்கவும் முடிவு செய்பவர். இவர்களுக்கு கன்னி ராசிக் காரர்களுடன் திருமணம் நடக்க வாய்ப்புண்டாகும்.
இல்லற வாழ்க்கை:- மீன ராசிக் காரர்களுக்கு ஒன்றிலிருந்து பல திருமணங்கள் நடைபெறும் முதல் திருமணத்தில நிம்மதியில் மறுமணம் செய்து சுகத்துடன் வாழக் கூடியவர்.
சொத்து:- இந்த ராசிக்காரர்கள் பணத்தை அவர்களே சம்பாதிப்பார்கள். லாட்டரி, இடம் வாங்கி விற்பதில் அதிக நஷ்டம் உண்டாகும். அப்படி இருந்தாலும் அவர்களின் வாழ்நாள் முழுவதும் பணம் குறையாது. பணம் தேவைப்பட்டால் உடனடியாக கிடைக்கும். பணம் இவர்களுக்கு சாதாரணமான ஒன்று. வெற்றியும் உண்டாகும். மீன ராசிக்காரர்கள் வாங்கும் இடங்களில் அதிக கஷ்டம் ஏற்பட வாய்ப்புண்டு. வியாபாரங்களில் ஏற்ற தாழ்வு நிகழும்.
விருப்பங்கள்:- மீன ராசிக் காரர்கள் கதை எழுதுவது, கதை கேட்பது, புகைப்படங்கள் எடுப்பது, படம் வரைவது, நல்ல படங்களை பார்ப்பது, கண்ணாடி பொருட்களை சேர்ப்பது பொழுதுபோக்காக இருக்கும். நடனம், பாட்டு, தார்மீக வேலைகள், படித்தல் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு விளையாட்டுகளை பார்ப்பதில் ஆர்வம் கொண்டவர்.
உடல் ஆரோக்கியம்:- மீன ராசிக் காரர்களுக்கு ரத்த கொதிப்பு, பார்வை கோளாறு, காலில் வலி, மார்பக வலி, சர்க்கரை நோய், தலை வலி மற்றும் பல உடல் உபாதைகள் வந்து தாக்கும். யாருக்கு வியர்வை அதிகமாக வெளியேருகிறதோ அவர்கள் நோய்யற்றவர்கள்.
பலவீனம்:- மீன ராசிக் காரர்கள் மிகவும் இரக்கம் கொண்ட கூச்ச சுபாவம் உடையவர். எதையும் எளிதில் புரிந்துக் கொள்ள மாட்டார்கள். யாரையும் பாராட்ட மாட்டார்கள், பிறரை ஏமாற்றுவர். இவரும் ஏமாறுவார், விழாக்களில் முக்கியமானதை மட்டும் கொண்டாடுவார், முக்கியமான காரியங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பவர். மற்றவரை கவரும் குணம் கொண்டவர், தான் கவிஞன் என்ற எண்ணம் கொண்டவர். இவரை எளிதில் புரிந்து கொள்ள முடியாது. இவர் முக்கியமான காரியங்களில் மட்டும் ஈடுபட கூடியவர். இந்த ராசிகாரர்களுக்கு மற்றவர் மதிப்பும் மரியாதையும் கொடுப்பர். இவர் சித்தாந்தத்தில் உயர்ந்து நின்றாலும் உண்மையில் மறைந்து இருப்பார். இவர் எளிமையான உடையில் இருப்பார். நண்பர்களிடம் நேர்மையாக இருக்கமாட்டார். மற்றவர்களின் வாகனங்களை வாங்க மாட்டார். அதிகமாக யோசிக்கக் கூடியவர். வெற்றி பெறக் கூடியவர். உலகத்தில் யதார்த்தமாக வாழக் கூடியவர். கனவு உலகத்தில் இருக்க கூடியவர். இவரின் கனவு பலிப்பதில்லை. இவர் இரகசியங்களை காப்பாற்றக் கூடியவர். இவர் வெற்றி பெற்ற செயல்களில் கஷ்டங்கள் நிறைந்து இருக்கும். அன்பு இவரின் மனதை மாற்றும். இவர்கள் கணித மேதையாகவும் இருப்பார்கள். நோய்கள் அடிக்கடி வந்து போகும்.
பண்பியல் தொகுப்பு:- மீன ராசிக் காரர்கள் நல்ல மனப் பக்குவத்தை உடையவர்கள். இந்த ராசிக் காரர்கள் யாரை நண்பனாக்கி கொள்கின்றனரோ அவர்கள் மிகவும் பாக்கியசாலி இவர்களின் நற்குணம் மிகுந்தவர். இவர்களுக்கு சங்கடங்கள் நேரும் சமயத்தில் புஷ்பராகம் கோமேகதம் அல்லது முத்தை மோதிரமாக அணிந்து கொள்ளுதல் அல்லது பக்கத்தில் வைத்துக் கொண்டாலும் துன்பம் விலகும். திங்கள் மற்றும் வியாழக் கிழமையில் சத்திய நாராயணனை பூஜை செய்தல் வேண்டும். அல்லது 16 திங்கட்கிழமை விரதம் இருத்தல் வேண்டும். காயத்ரி மந்திரம் படித்தல் வேண்டும். வியாழக் கிழமையில் விரதம் இரந்தால் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். கண்ணாடி, பருப்பு, பொருட்கள், நெய், நீலநிற துணி, புத்தகம், நீலநிறப் பூ, பழம் முதலியவற்றை தானம் செய்தல் வேண்டும். “ஓம் ஹங் ஹி ஹெளசா ப்ருஹாஸ்பதே நமஹ” என்ற மந்திரத்தை 19000 முறை உச்சரிக்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம் :- மீன ராசிக் காரர்களுக்கு சிவப்பு, மஞ்சள் போன்றவை ராசியான நிறம். இவர்கள் இந்த நிறத்தில் ஆடைகளை அணிவதன் மூலம் அமைதி நிலவுகிறது. மஞ்சள் நிற ஆடை அணிந்தால் லாபம் உண்டாகும். இவர்களின் ஆடையில் இந்த நிறம் கட்டாயம் இருத்தல் வேண்டும்.
அதிர்ஷ்ட கல் :- மீன ராசிக் காரர்களுக்கு ராசியான கல் புஷ்பராகம், கோமேதகம், கடவுளுக்கே குருவாக இருக்க வேண்டுமானால் புஷ்பராகத்தையும் கோமதகத்தையும் அணிய வேண்டும். வியாழக் கிழமையன்று தங்கத்தில் அல்லது செம்பில் மோதிரமாக்கி 3 அல்லது 4 ரத்தினங்களை பதித்து கடவுளை வேண்டி ஆள்காட்டி விரலில் அணிய வேண்டும். இவர்களுக்கு கோமேதகம் மற்றும் புஷ்பராக கற்கள் தன்மையை தரும்.
அதிர்ஷ்ட எண்:- மீன ராசிக் காரர்களுக்கு 3 மற்றும் 7 ராசியான எண். மற்ற எண்கள் 3, 12, 21, 30, 48, 57, 66, 75. மற்ற எண் 7வில் 7, 16, 25, 34, 43, 52, 61, 70 இவைகள் சுபம் தரும் எண்கள். இது மட்டும் அல்லாமல் 1, 2, 9 சுபம் தரும். 4, 8 சமம். 5,6 நன்மை தராது. இவற்றில் சுபம் தரும் எண்ணைக் கொண்டு வியாபாரம் செய்தால் நன்மை தரும்.
அதிர்ஷ்ட நாள்:- மீன ராசிக் காரர்கள் கடவுளுக்கே குருவானவர். இவர்களுக்கு ராசியான தினம் வியாழக் கிழமை. இந்த நாள் விசேஷமான நாள். இவர்கள் ஞாயிற்றுக் கிழமையும் திங்கட் கிழமையும் ராசியான நாட்களாக அமைகின்றன. இந்த ராசிக்காரர்களுக்கு புதன் கிழமை ராசி இல்லை. செவ்வாய் கிழமையில் கொடுத்தல் வாங்கல் கூடாது. இந்த நாள் இவர்களுக்கு துக்கமான நாள். இந்நாட்களில் புது வேலைகளை தொடங்க கூடாது.