சித்திரை நட்சத்திரம்  சித்திரை நட்சத்திர தன்மைகள்  செவ்வாய் பகவானை அதிபதியாக கொண்ட இரண்டாவது நட்சத்திரம் சித்திரை. வெண்மையான தோற்றத்துடன் மிக அழகாக தோற்றமளிப்பதால் சௌம்ய தாரா என்றும் இந்த நட்சத்திரம் அழைக்கப்படுகிறது. சுபகாரியங்களுக்கேற்ற நட்சத்திரம் இது. இதன் முதல் இரண்டு பாதங்கள் புதனை அதிபதியாகக் கொண்ட கன்னி ராசியிலும், அடுத்த இரண்டு பாதங்கள் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட துலாம் ராசியிலும் அமைந்துள்ளன. பொதுவான குணங்கள் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தைரியசாலிகளாக இருப்பார்கள். சொல்ல வந்த விஷயத்தை தெளிவாகவும், … Read more

ஹஸ்தம் நட்சத்திரம்  அஸ்தம் நட்சத்திர தன்மைகள்:- அஸ்தம் என்றால் உள்ளங்கை என்று பொருள். சந்திரனை அதிபதியாக கொண்டுள்ள நட்சத்திரம். கன்னி ராசியில் அமைந்துள்ளது. இதன் ராசிநாதன் புதன். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறருக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர்கள். மற்றவர்களுக்கு உதவ உதவ, இவர்களது வளர்ச்சியும் உயர்ந்து கொண்டேயிருக்கும். தர்மத்திற்காக இவர்கள் செலவிடும் தொகையை விட பல மடங்கு செல்வம் இவர்களுக்கு பெருகும். பொதுவான குணங்கள்:- எப்போதும் தேனியைப் போல சுறுசுறுப்பாக இருப்பார்கள். முன்கோபிகளாக இருப்பார்கள். தாயை மிகவும் … Read more

உத்திரம் நட்சத்திரம்  உத்திரம் நட்சத்திர தன்மைகள்:- உத்திரம் நட்சத்திரத்தின் முதல் பாதம் சிம்ம ராசியிலும், 2,3,4, பாதங்கள் கன்னி ராசியிலும் அமைந்துள்ளன. முதல் பாதத்திற்கு ராசி நாதன் சூரியன். மற்ற மூன்று பாதங்களின் ராசி நாதன் புதன். சூரிய பகவானின் அம்சத்தில் வந்த இரண்டாவது நட்சத்திரம். பொதுவான குணங்கள்:- வசீகரமான தோற்றத்தைப் பெற்றிருப்பார்கள். உடலை சிக்கென்று கட்டுக்கோப்பாக வைத்திருப்பார்கள். நடையில் நளினம் மிளிரும். சிறந்த கல்விமானாக விளங்குவார்கள். சில காரியங்களை தன்னைத் தவிர யாராலும் செய்ய முடியாது எண்ணம் … Read more

பூரம் நட்சத்திரம்  பூரம் நட்சத்திர தன்மைகள் :- பூரம் நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன். ராசி சூரியன். காண்பவர்களை கவர்ந்திழுக்கும் வசீகரம் கொண்டவர்கள். யதார்த்தமானவர்கள். ஆன்மிகத் தேடல் இருக்கும். எப்போதும் ஏதாவது ஒரு சிந்தனையில் ஆழ்ந்திருப்பார்கள். கருணையும், இரக்கமும் கொண்டவர்கள். பேச்சாற்றலால் மற்றவர்களை எளிதில் கவர்ந்து விடுவார்கள். எதையும் முன்கூட்டியே அறிவும் திறன் பெற்றவர்கள். ஆடம்பர வாழ்க்கையை விரும்புகிறவர்கள். சற்று முன்கோபிகளாக இருப்பார்கள். பொதுவான குணங்கள்:- கடல் கடந்து சென்று வணிகம் செய்யும் அமைப்பைப் பெற்றவர்கள். ஏற்றுமதி இறக்குமதி … Read more

மகம் நட்சத்திரம்  மகம் நட்சத்திர குணங்கள்:- மகம் நட்சத்திரத்தின் அதிபதி கேது. சிம்ம ராசியை சேர்ந்த இந்த நட்சத்திரத்தின் ராசி அதிபதி சூரியன். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதையாவது சாதிக்க வேண்டும் என்று எப்போதும் சிந்தனையில் மூழ்கியிருப்பார்கள். சிறந்த தெய்வ பக்தியைக் கொண்டவர்கள். சாஸ்திரங்கள், சம்பிரதாயங்களுக்கு முக்கியத்தும் அளிப்பார்கள். பிடிவாத குணம் கொண்டவர்கள். பொதுவான குணங்கள்:- எதையும் வெளிப்படையாக பேசும் தன்மையுடையவர்கள். புகழ் பெறுவதற்காக எதையும் இழக்கத் துணிபவர்கள். பேச்சிலும், வாதத்திலும் திறமைமிக்கவர்கள். நிர்வாகத் திறமை கொண்டவர்கள். … Read more

ஆயில்யம் நட்சத்திரம் ஆயில்யம் நட்சத்திர குணங்கள்:- ஆயில்யம் நட்சத்திரத்திற்கு புதனும், சந்திரனும் அதிபதிகள். இது கடக ராசியின் நட்சத்திரம். சமயோஜித புத்தி கொண்டவர்கள். இனிமையாக பேசுபவர்கள். நகைச்சுவை உணர்வு நிரம்பியவர்கள். பிறரை எடை போடுவதில் வல்லவர்கள். சிறந்த அறிவாற்றலைக் கொண்டவர்கள். வாழ்வில் வெற்றி பெற கடுமையாக உழைப்பார்கள். பொதுவான குணங்கள் மன வலிமையும், உடல் வலிமையும் ஒருங்கேப் பெற்றவர்கள். எந்த பிரச்னையையும் எதிர்கொள்ளும் துணிவைக் கொண்டவர்கள். ஆயில்யம் நட்சத்திரம் மாமியாருக்கு ஆகாது என்ற ஒரு சொல் இருக்கிறது. … Read more

பூசம் நட்சத்திரம்  பூசம் நட்சத்திர குணங்கள்:- நவக்கிரகங்களில் நீதிமான் என்று சொல்லப்படுகிற சனீஸ்வர பகவான் அதிபதியாக ஆட்சி செய்யும் நட்சத்திரம் பூசம். சிறப்பு வாய்ந்த நட்சத்திரங்களில் பூசமும் ஒன்று. பூசம் நட்சத்திரத்தின் ராசி கடகம். ராசி அதிபதி சந்திரன். பொதுவான குணங்கள் நீதி, நேர்மை, நியாயம் இவைகளை கண்களாக பாவித்து வழி நடப்பவர்கள் பூசம் நட்சத்திரக்காரர்கள். மன உறுதியும், உடல் உறுதியையும் இயல்பாகவே பெற்றவர்கள். எந்த நெருக்கடியை சமார்த்தியமாக சமாளிப்பார்கள். எப்படிப்பட்ட சவாலான பணிகளையும் திறம்பட செய்து … Read more

புனர்பூசம் நட்சத்திரம்  புனர்பூசம் நட்சத்திர குணங்கள்:- நட்சத்திரங்கள் வரிசையில் 7வது இடத்தில் அமைந்துள்ள புனர்பூசம் நட்சத்திரம். விஷ்ணு பகவான் ராமனாக அவதரித்தது இந்த நட்சத்திரத்தில் தான் என்பது கூடுதல் சிறப்பு. இதன் அதிபதி குரு பகவானாவார். 1,2,3 பாதங்கள் மிதுன ராசியிலும், 4ம் பாதம் சந்திரனின் ராசியான கடகத்திலும் உள்ளது. பொதுவான குணங்கள் நேர்மையும், ஒழுக்கமும் கொண்ட வாழ்க்கையை வாழ்பவர்கள் புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள். பொய் பேசுவது இவர்களுக்கு பிடிக்காது. உண்மையை உரைப்பதால் தனக்கு எந்த பலனும் இல்லை … Read more

திருவாதிரை நட்சத்திரம்  திருவாதிரை நட்சத்திர குணங்கள்:- திருவாதிரை நட்சத்திரம் சிவபெருமானின் அம்சமான நடராஜர் அவதரித்த நட்சத்திரம். சர்ப்ப கிரகங்களில் ராகுவின் சாரம் பெற்றுள்ள நட்சத்திரம் இது. சரியான காரியவாதியாக இருப்பார்கள். சந்தர்ப்பங்களுக்கு ஏற்றார் போல் மாற்றி மாற்றி பேசுவதில் வல்லவர்கள். புத்திசாலிகளாக இருப்பார்கள். இடம், பொருள், ஏவல் அறிந்து பேசுபவர்களாக இருப்பதால் நண்பர்கள் அதிகமாக இருப்பார்கள். எதிரிகள் குறைவு தான். முன்கோபி. உள்ளே ஒன்றை வைத்துக் கொண்டு வெளியே பேசத் தெரியாதவர்கள். எதையும் வெளிப்படையாக கொட்டி விடுவார்கள். … Read more

மிருகசீரிஷம் நட்சத்திரம் மிருகசீரிடம் நட்சத்திர குணங்கள்:– 27 நட்சத்திரங்கள் வரிசையில் 5வதாக வருகின்ற நட்சத்திரம் மிருகசீரிடம். இதன் அதிபதி செவ்வாய் பகவான். இரண்டு ராசிகளில் இடம்பெறுகின்ற நட்சத்திரம் இது. முதல் இரண்டு பாதங்கள் ரிஷப ராசியிலும், அடுத்த இரண்டு பாதங்கள் மிதுன ராசியிலும் இடம்பெறுகிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் துணிச்சல்காரர்களாக இருப்பார்கள். தேசப்பற்றுக் கொண்டவர்கள். பொதுவான குணங்கள் எதிலும் முழுமையான நம்பிக்கைக் கொண்டிருப்பார்கள். மன உறுதி நிறைந்தவர்கள். வலிமையான உடற்கட்டைப் பெற்றிருப்பார்கள். சுறுசுறுப்பானவர்கள். எப்போதும் ஏதாவது வேலை … Read more