கர்மா ஜோதிடம்
முன்னோர்களின் கர்மா எப்படி நம்மை பாதிக்கிறது??? முன்னோர் வழி தோஷங்கள் நம் உடலின் டிஎன்ஏ வழியாகக் கடத்தப்படுகிறது. நவீன எபிஜெனெடிக்ஸ் (Epigenetics) அறிவியலின்படி, முன்னோர்கள் அனுபவித்த கடுமையான மன அழுத்தம், பாவம், அல்லது நற்செயல்கள் அவர்களின் மரபணு குறியீடுகளில் பதிவாகி அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்தப்படுகிறது. இதையே சாஸ்திரங்கள் ‘பித்ரு கர்மா’ என்கின்றன.
நமது தாத்தா அல்லது பூட்டன் வாழ்ந்த காலத்தில் அனுபவித்த கடுமையான பஞ்சம், மனவேதனை, அல்லது அவர்கள் செய்த குற்றங்கள் அவர்களின் DNA-வில் ரசாயன மாற்றங்களை (Chemical Switches) உருவாக்கி விடுகின்றன. அந்த மாற்றங்கள் அடுத்தடுத்த தலைமுறைக்கு மாற்றப்பட்டு, பேரப் பிள்ளைகளுக்கும் அதே போன்ற பயம், மன அழுத்தம் அல்லது நோய்களை உருவாக்குகின்றன.
இதையே வேத ஜோதிடம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே “பித்ரு தோஷம்” (Ancestral Curse / Debt) என்று கூறியது. முன்னோர்கள் செய்த பாவங்களின் பிரதிபலிப்பே ஜாதகத்தில் சூரியன் – ராகு, சந்திரன் ராகு சேர்க்கையாகவோ, அல்லது 9-ஆம் இடம் பலவீனமாகவோ அமைந்து நமக்குத் தடைகளை உருவாக்குகிறது.
இதற்கான பரிகாரம் என்ன…???
ஒரு வம்சத்தில் பிறந்த அனைத்து மனிதர்களின் DNA-விலும் ஒரு குறிப்பிட்ட “வம்சாவளி அலைவரிசை” (Genetic Frequency) இருக்கும். இந்த வம்ச அலைவரிசையைச் சரிசெய்யும் பிரபஞ்சக் கட்டுப்பாட்டு மையமே (Root Server) குலதெய்வக் கோவில் ஆகும்.
நீங்கள் குலதெய்வக் கோவிலுக்குச் சென்று அந்த மண்ணில் கால்களை வைத்து வழிபடும் போது, தலைமுறை தலைமுறையாக உங்கள் DNA-வில் படிந்துள்ள பித்ரு சாபங்கள் மற்றும் எதிர்மறை அலைகள் செயலிழக்கச் செய்யப்பட்டு, செல்லுலார் ஹீலிங் (Cellular Healing) நடைபெறுகிறது. இதனால்தான் குலதெய்வ வழிபாட்டை எந்தக் காரணத்திற்காகவும் விடக்கூடாது என்று முன்னோர்கள் கூறினர்.
மேலும் முன்னோர்களுக்கு முறையாக பித்ரு தோஷ நிவர்த்தி பூஜைகள் செய்து தோஷங்களில் இருந்து விடுபடலாம்.
யாரெல்லாம் தங்கள் குல தெய்வம் வழிபாட்டை விடாமல் நம்பிக்கையுடன் செய்து வருகிறார்களோ அவர்கள் வாழ்வில் பெரும் தடைகள் பாதிப்புகள் இருப்பதில்லை.
குல தெய்வம் மறந்தவர்கள், வேறொரு தெய்வத்தை வணங்குபவர்கள், குல தெய்வத்தை அவமதிப்பவர்கள் தான் காரணம் புரியாத பிரச்சினைகள், தீவிர நோய்கள், தடைகள் என்று பிரச்சினைகளில் வாழ்கிறார்கள்.